Tuesday, February 22, 2011

மந்திரச்சிமிழ் 5&6

அன்பார்ந்த வாசகர்களுக்கு

மந்திரச்சிமிழ் முந்தைய இதழுக்கும் இப்போதைய ஐந்தாவது இதழ் வெளியாகும் இடைவெளிக்கும் பல நிகழ்வுகள் நடந் தேறியுள்ளன. பாபர் மசூதி குறித்த கட்டப் பஞ்சாயத்து முதல் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வரை இந்திய உளவியலின் கோரமுகமும், தமிழ் இலக்கியச் சூழலையும் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. எல்லாம் ஆளுமைகளால் நேரும் விபரிதம். தமிழில் இலக்கியம் என்ற பெயரில் வெளி வந்துகொண்டிருக்கும் வறண்ட ‘நதி’யின் ‘தீரா’த வேட்கையும், ‘உயிர’ற்ற பிரதிகளையுடைய ஆளு‘மை’களும் அதனதன் போக்கில் நெடிய பாதக விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
 சென்னை புத்தகக் கண்காட்சி  நடைபெறும் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். அதை முன்னிட்டு முக்கிய இலக்கிய கர்த்தாக் களின் பதிப்பகம் பல நூறு புத்தகங்கள் அச்சிடும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்குத் தேவையான தாள்களை முன்கூட்டிய வாங்கி சேமித்து வைக்கவும், அதே போல் மலம் துடைப்போர் முன் கூட்டிய காகிதங்களை வாங்கி வைத்து கொள்ளும்படி எச்சரிக்கைப் படுகிறார்கள். அப்படியில்லை யென்றால் சற்று பொறுத்திருத்து புத்தகம் வெளியானதும் உபயோகத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கழுதைகள் மிகவும் அருகி வரும் காலக்கட்டத்தில் அவசியம் உங்களுக்கு வெற்று தாள்களுக்கு பதிலாக அச்சிட்ட தாள்களே கிடைக்கப்பெறும்.
இலவசங்களே தீர்ந்து போகும் அளவுக்கு கலைஞரின் இலவசத்திட்டங்களுக்கு அடுத்தப்படியாக கலைஞர் வீடு கட்டும் திட்டம் நிறைவேறி வருகிறது. வரும் தேர்தலில் இலவசங்கள் குறித்து அறிவிப்பு விடுவதற்கே அவருக்கு பஞ்சம் நேரலாம். அதற்காக பன்னாட்டு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்நத் தோடு இலவசங்களை ஆராய்வதற்கே ஒரு ஆய்வு மையம் அமைக்கும் நெருக்கடி கூட கலைஞருக்கு வரலாம். ஆகையால் எங்களின் சிற்றறிவுக்கு எட்டிய  யோசனையாக அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட் தரவேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைக்கிறோம். ஏன் 2ஜி ஸ்பெக்ட்ரத்தைக் கூட இலவசமாகத் தரலாம்.
 வெகுஜன பத்திரிகையில் வெளியான தங்களது படைப்புகள் சிறுபத்திரிக்கையில் வெளி வருவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவைகள் என்பதாக சிலர் தெரிவித்து வரும் வேளையில் இது குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. சிறு பத்திரிக்கை என்ன என்பது இவர்கள் முதலில் அறிந்து கொள்ளட்டும். சிறு பத்திரிக்கையில் முதல் கடமையே அறம் சார்ந்த விஷயம். அத்தகைய பத்திரிகையும் அறமுள்ளதாக இருக்க வேண்டும். எழுதுபவரும் அந்த அறத்துடன் இருக்க வேண்டும். அயல் இலக்கிய படைப்புகளை அங்கும் இங்கும் மாற்றி தன் படைப்பாக வெளியிடுவது எத்தகைய சிறு பத்திரிகை  தரம் என்பது புலப்பட்ட வில்லை. வெகுஜன ரசனை என்பதோடு தன்னை இணைத்துக் கொண்டு, அதில் சுக்கில சுகம் அடைந்து விட்ட இந்த பராக்கிரம பாக்கியசாலிகளுக்கு இம்மாதிரியாக சிறுபத்திரிகை மீது ரோமான்டிசம் அவசியமில்லை.
தமிழில் புதிய போக்கு சமீப காலமாக மேலோன்றி வருகிறது. தினக்கழிவு போல் எழுதித் தள்ளுகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தலையணை அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள். அந்த நூல்களை எவரொருவராவது முழுவதுமாக படித்திருப்பார்களென்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அளவு பொருட்டல்ல. அதில் படிக்கும் அளவுக்கு ஏதும் இல்லை என்பதே நிதர்சனம். வாசிப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி தன்னை ஒரு மேதைமைமிக்கவராக காட்டிக்கொள்ளும் விதம் மிக அற்பமானது.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒப்பற்ற தமிழ் இலக்கிய கர்த்தா சாரு நிவேதா’வின் புத்தக வெளியீட்டில் கலையுலக மாமேதை கனிமொழி அழைக்கப்பட்டிருக்கிறார். உலகமே அவரது அரும்பெரும் சாதனையான 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து உமிழ்ந்துகொண்டிருக்கையில் அவருக்கு தார்மீக ஆதரவை தரும் வகையிலும், இலக்கிய கர்த்தா என்ற அங்கீகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்கும், முன் பெற்ற பிச்சைகளுக்கு பிராயச்சித்தமாகக்கூட இதைக் கொள்ளலாம். அரசியலில் தன்னாலான மேதகு காரியங்கள் போதாதென்று அந்த அம்மையாரும் புறப்பட்டு வந்துவிட்டார். ஆட்சிமாறினால் அடுத்து வரும் ஆட்சியாளர்களை விமர்சித்து கவிதைபுனைய இலக்கிய கூலிகளைத் தேற்ற தனது அடிவருடிகளை தேடி வந்துவிட்டார் போலும். இல்லை அனைத்து துறை போலவே இத்துறையிலும் தங்கள் குடும்பத்தின் ஏகபோகம் என்பதாக எண்ணி கொண்டார் போல். அதுவும் சாத்தியம்தான். தமிழ்நாடு அடிவருடிகளின் சொர்க்கபூமி. உயிர்மை மீது கொண்டிருக்கும் அனுதாபத்தை  சாதகமாக்கிக் கொண்டு மனுஷியபுத்திரன் ஆடும் ஆட்டத்தை அடக்கிக் கொள்வது அவருக்கு நல்லது.        
 இலக்கியம் என்பது மொழியை சிலாகித்து எழுத வேண்டிய ஒன்று. அதில் எத்தகைய விரசமும் இருக்க வாய்ப்பில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பற்றி பேசும் சாரு, அவரது மொழியின் இலகுத்தன்மை குறித்து அறிந்துள்ளாரா என்பது சந்தேகமாக உள்ளது. எஸ். ராமகிருஷ்ணன் பரந்துபட்ட வாசிப்பாளர். அவரது முற்பகுதி எழுத்துகள் சிறப்பானவை. தமிழில் காலம் கடந்து முன்னணி இலக்கியவாதியாக திகழ வேண்டிய எஸ். ராமகிருஷ்ணன் அரசியல்வாதி போன்ற செயல்களில் ஈடுபடுவது உகந்ததாக அமையாது. அதற்குப் பதிலாக தனது படைப்புகளின் மீது அக்கறைக் கொண்டு இதுவரை அவர் வீணடித்த காலங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும். 
கலைஞர் ஒரு இலக்கியவாதி அல்ல என்று தனது ஞானத்தின் மூலம் கண்டறிந்த ஜெயமோகனின் எழுத்துகளும் இலக்கிய தரமற்றது என்று யாவரும் அறிந்ததே. எழுத்து என்பது ஒருவித பித்து நிலையிலிருந்து வெளியாகும் அம்சம். அத்தகைய நிலையில் ஜெயமோகன் ஒரு சைக்கோ என்று கூறி, அவருக்கு ஒரு பித்தநிலை வழங்கி ஆசி தந்த கனிமொழியை வைத்து புத்தக வெளியீட்டை நடத்திய சாருக்கு ஜெயமோகனைப் பற்றி அத்தகைய ஆவேசம் அவசியமில்லை. ஒருவேளை ஜெயமோகன் சினிமாத் துறையில் பிரவேசிப்பதால் சாருவுக்கு ஆதங்கம் இருக்கலாம். இலக்கியம் என்று எடுத்துகொண்டால் இருவருமே பூஜியம். தமிழ் வாசகர்களுக்கு எழுதுவது குறித்து அடிக்கடி வருத்தம் கொள்ளும் சாரு, அத்தகைய உவகையற்ற பணியை விடுத்து சந்தோஷம் தரும் ஏனைய செயல்களில் அவர் ஈடுபடலாம். குறிப்பாக புகழ்மிக்க உலகத்தரம் வாய்ந்த அரசியல் விமர்சகரிடம் தன் டவுசரை கிழற்றி காட்டி புணரச்செய்ய கட்டாயப்படுத்தியது போல்.
மந்திரச்சிமிழ் இதழ் இரண்டாம் ஆண்டை எடுத்துவைக்கும் வேளையில் அரசியலை முற்றிலும் தவிர்க்க எண்ணியுள்ளோம். இனி இதழில் அரசியல் தொடர்பான விஷயங்கள் அறவே இருக்காது. ஆகையால் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம். இதழ் முற்றிலும் கலை இதழாகவே இனி பிரவேசிக்கவுள்ளது. இதழில் அயல்மொழி படைப்புகள் அதிகம் வெளிவருவது குறித்து பலர் வருத்தப்படுகிறார்கள். பத்திரிகை தமிழில்தான் வருகிறது என்பதையும், அயல் மொழிகளில் வருவதில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

- ஆசிரியர்

Saturday, August 14, 2010

மந்திரச்சிமிழ் இதழ்- 4

மந்திரச்சிமிழ் இதழ்-4
அன்பார்ந்த வாசகர்களுக்கு,
உலக செம்மொழி மாநாடு சூன் மாதம் மிக அருமையாக நடந்தேறியுள்ளது. சும்மா கிடந்த தமிழை தனது இலக்கியப் பேராற்றல் மூலம் செம்மொழியாக ஆக்கிய பெருமை உலக ஒப்பற்ற தானைத் தலைவர் கலைஞரின் அரும்பெரும் சாதனையை நம்மால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. வந்திருந்த அறிஞர் பெருமக்கள் வாசித்த வாசிப்பில் சிறப்பாக அமைந்திருந்தது மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் வாசிப்புத் தான். “தமிழ் ஆதிக்கம் செலுத்தவது எதிர்த்து மணமேடையிலிருந்து புறப்பட்டு வந்த போராளி கலைஞர்” என்றார்.  தமிழ்நாட்டில் நடந்தேறிய அனைத்து உலக தமிழ் மாநாடுகளுக்கு இணையாகவும், இன்னும் மேலான கீழ்மையுடனும் நடந்தேறியது.
விழாவின் முத்தாய்ப்பாக தமிழ் படைப்புகள் மொழிபெயர்க்க வேண்டுமென்ற தனது ஞானத்தை கலைஞர் வெளியிட்டார். மிகச் சிறப்பான அறிவிப்பு அத்தகையது. தமிழ் நாட்டில் ஆகச்சிறந்த படைப்பாளிகளும், மேதைகளும் குவிந்து கிடக்கிறார்கள். முதலில், கலைஞர், கனிமொழி, வைரமுத்து, வெறிகொண்டான் போன்றவர்களின் ஆற்றல்களை தான் உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும்.
இதழ் வெகுவாக வரவேற்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இவ்வாண்டிற்கான ‘கரிசல் அறக்கட்டளை’ விருதினை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். இதழ் குறித்து நற்சான்று அளித்து, மேலும் ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் விருதளித்த எழுத்தாளர் கி.ராஜநாரயாணன் அவர்களுக்கும், ஏனையவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பதிப்பாசிரியர்

பொருளடக்கம்
கடல்சிங்கத் திருவிழா                                4
செம்மொழி மாநாடு: நியான் விளக்கும், நீலம்பாரித்த மொழியும்        7
என்னைத் தமிழர் என்று அங்கிகரிப்பீர்களாக                12
இரு நண்பர்கள் (கெய்டே மேப்பேசன்)                    15
கவிதை: முபீன் சாதிகா                            20
கவிதை: -ஹோர்ஹே லூயி போர்ஹேஸ்-                    22
ஆளுமைகள்-அறிமுகங்கள் (லியோ டால்ஸ்டாய்)                23
ஆவணப்பட விமர்சனம்                            26
போபால் பேரழிவு: நீதி என்னும் பெருங்கூத்து                28
உலகமயமாதலின் சீர் குலைவும்
தேசியவாதத்தின் மீள் உருவாக்கமும் - 2                     32
அந்நிய நேரடி முதலீடு: சர்வம் லாபமயம்                    35
கிரிக்கெட்: காலனி ஆதிக்கத்தின் நீட்சி... அடிமைகளின் மோகம்        39
உணர்வுகள் கூடும் காலி இல்லம்-
கிம் கி- டுக்கின் 3- ஐயன்                            43

Thursday, July 22, 2010

மந்திரச்சிமிழ் இதழ் 4 (ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது,)

அன்பார்ந்த வாசகர்களுக்கு
உலக செம்மொழி மாநாடு சூன் மாதம் மிக அருமையாக நடந்தேறியுள்ளது. சும்மா கிடந்த தமிழை தனது இலக்கிய பேராற்றல் மூலம் செம்மொழியாக ஆக்கிய பெருமை உலக ஒப்பற்ற தானைத் தலைவர் கலைஞரின் அரும்பெரும் சாதனையை நாம் மெச்சாமல் இருக்க முடிய வில்லை. வந்திருந்த அறிஞர் பெருமக்கள் வாசித்த வாசிப்பில் சிறப்பாக அமைந்திருந்தது மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் வாசிப்புத் தான் மிக சரியாக பொருந்தியது. “தமிழை ஆதிக்கம் செலுத்தவதை எதிர்த்து கலைஞர் மணமேடையிலிருந்து புறபட்டு வந்த போராளி,” என்றார்.  தமிழ்நாட்டில் நடந்தேறிய அனைத்து உலக தமிழ் மாநாடுகளுக்கு இணையாகவும், இன்னும் மேலான கீழ்மையுடன் நடந்தேறியது. விழாவின் முத்தாய்ப்பாக தமிழ் படைப்புகள் மொழிப்பெயர்க்க வேண்டுமென்ற தனது ஞானத்தை கலைஞர் வெளியிட்டார். மிக சிறப்பான அறிவிப்பு அத்தகையது. தமிழ் நாட்டில் ஆகச்சிறந்த படைப்பாளிகளும், மேதைகளும் குவிந்து கிடக்கிறார்கள். முதலில், கலைஞர், கனிமொழி, வைரமுத்து, மறைந்த நன்னிலம் நடராசன், வெறிகொண்டான் போன்றவர்களின் ஆற்றல்களை தான் உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்போது தான் நம் ஆற்றலை உலகுக்கு உணர்த்த முடியும். மாநாடு நடந்து முடிகிற வேளையில் பழ. கருப்பையா தாக்கப்பட்டும், வீடு சூறையாடப்பட்டும் உள்ளது. அவரும் அவரது மகன் ஆறுமுக தமிழனும் தீவிர தமிழ் பற்றாளர்கள், ஆய்வாளர்களும் கூட.  தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்ஷேக்கும், தமிழ் உணர்வார்களை காயப்படுத்தும் இவர்களுக்கும் என்ன வித்யாசம். இதை விட வேறு பல கேவலமான விஷயங்களும் மாநாட்டில் நடந்தேறியுள்ளது. கேவலத்தக்க தமிழ் சொறியர்களை கொண்டு மாநாடு நடத்தியுள்ள கருணாநிதி சற்றும் கூச்சம் இல்லாத அறுவருக்கத்தக்க சதைப் பிண்டம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.
இதனிடையே மாநாடு நடந்து முடிந்த அடுத்த நாளிலேயே தமிழருவி மணியன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சூடு கொடுத்திருக்கிறது. தமிழறிஞர்களை போற்றி வளர்க்க வழியின்றி எப்படி தமிழ் மீட்சி கொள்ளும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் கலைஞரை பொருத்தவரையில் வேசியைப் போல் இரந்துண்ணும் அறிஞர்களே போதுமானது. இத்தகைய சூழ்நிலைக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. சரியான அரசியல் மற்றும் கலை பற்றிய அறிதலும், புரிதலும் பெறதாதவாறு மக்களை வைத்திருப்பது தான் என்பதை நமக்கு சற்றே உணர தருகிறது. அதற்கு உதாரணம் மாநாட்டுக்கு வந்த ஒரு கழக உடன்பிறப்பு தேவதேவன் கவிதையை வாங்கியுள்ளார். கடை விரித்திருந்த அந்த பதிப்பாளரிடம் நாற்பது ரூபாய் விலை இப்புத்தகத்திற்கு அதிகம் என்று கூறி, பேரம் பேசி இருபத்தைந்து ரூபாய்க்கு அப்புத்தகத்தை வாங்கியுள்ளார். வாங்கும் போது நம்ம ஆளு இதை எழுதியதுபோல்  (அந்த உடன் பிறப்பு தேவதேவனின் பெயரில் உள்ள பிற்பகுதி வார்த்தையை சாதி பட்டம் என்று தவறுதலாக எண்ணிருந்தார். ஆனால் அந்த நபர் நினைத்தது போல் கவிஞர் அச்சாதியை சேர்ந்தவரும் அல்ல) என்ற பெருமித்துடன் அதனை வாங்கியுள்ளார். அவ்வாறாகத்தான் மக்களும், கழக உடன் பிறப்புகளும் உள்ளனர். இத்தகைய மனிதர்களிடம் தான் கலைஞர் தனது வாய் ஜாலத்தை கட்டி தன்னை ஒரு ரட்சகராக பாவித்து வருகிறார். அது தான் அவரது விருப்பமும் கூட. எண்ணற்றற வியாதிகளை போல் பெருகி கிடக்கும் ஊடகங்கள் அனைத்தும் பிச்சைகாரர்களை போல் இரந்துண்ணும் நிலையை காண முடிகிறது.  இந்த மாநாட்டின் விளைவால் அணு அளவு நன்மைக் கூட ஏற்பட போவதில்லை.
அடுத்ததாக மாவோயிஸ்டு பிரச்சனையில் இந்திய பேரரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து நோக்குகையில் இந்திய அரசாங்கம் சாவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. படையினரை பெருமுதலாளி தரகு அரசாங்கம் கைகூலியாக பயன்படுத்தி வருகிறது. படையினர் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.   

Sunday, May 23, 2010

உலகமயமாதலின் சீர் குலைவும் தேசியவாதத்தின் மீள் உருவாக்கமும்

உலகமயமாதலின் சீர் குலைவும் தேசியவாதத்தின் மீள் உருவாக்கமும்

மிக உன்னதம் என்று கருதப்படும் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் சில பத்து ஆண்டுகளிலேயே காலாவதி ஆகிவிடுகின்றன. சில கொள்கைகள் மட்டுமே அதிகபட்சம்  ஐம்பது ஆண்டுகள் வரை நீடித்து நின்று, பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப சாத்தியங்களை நிகழ்த்தி விட்டு மறைகின்றன.  அவைகளும்கூட ராணுவ ஆதிக்கத்தினாலேயே தக்க வைக்கப்பட்டன. அத்தகைய வழியில் தான் பரந்து விரிந்ததொரு தாராள பொருளாதார முறைமை முப்பது ஆண்டுகள் மட்டும் நீடித்து விட்டு 1929 ஆம் ஆண்டு காலாவதியானது. அதேப் போல் பொதுவுடைமை சித்தாந்தமும் உலகளாவிய கொள்கை யாகவும், ஒரு மததைப் போலவும், பொருளாதாரக் கொள்கையாகவும் ரஷியாவில் எழுபது ஆண்டுகளும், மத்திய ஐரோப்பியாவில் நாற்பத்தைந்து வருடங்களும் வியாபித்திரந்தது. அதுவும் ராணுவத்திற்கும் புஜ பலத்திற்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. அதேப் போலவே தான் *கேம்னிஜியனிச’மும் நாற்பத்தி ஐந்து வருடங்கள் மட்டுமே இருந்து விட்டு காலாவதியானது.  அவ்வகை யில் உலகமயமாதல் கொள்கையும் தனது தொழிற் நுட்ப பராகிரமத்தை யும், சந்தை வழிப்பாட்டு தன்மை யையும், அறிஞர் பெருமக்களின் அறிவாற்றலையும் கொண்டு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கோலாட்சி செய்துவிட்டு இப் போது மரணித்து விட்டது.
பெரும் கோட்பாடுகள் ஒரே இரவில் காலாவதியாகி விடுவ தில்லை என்றாலும் அதன் பாணி கள், அதாவது உடையோ அல்லது உணவோ, அல்லது பொருளா தாரமே கூட காலாவதியாகின்றன. உலகமயமாதல் கொள்கையின் மீது கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கையினால் பலர் எழுப்பிய நம்பிக்கை கட்டிடங்கள் அனைத்தும் தகர்ந்து நொறுங்கி விழும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நன்னம்பிக்கை முனையின் ஊடாக மேற்கு இந்திய தீவையடைந் ததும், அமெரிக்காவை கண்டறிந் ததும் தான் மனித வரலாற்றின் மிக முக்கியமானது. அதன் பிறகு தான் மேற்கிந்திய தீவு மற்றும் கீழ் நாடுகளுடைனான வணிகத்தினால் பெரும் மேலை நாடுகள் பெரும் பயனடைந்தன. அதே வேளையில் அந்நிகழ்வினால் பூர்வீக குடிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
தனது தோற்றுவாயிலிருந்து முதலாளித்துவம் உலகளாவிய விஷயமாக கோலாட்சி செய்து வந்தது. லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தேசங்களைக் கண்டறிந்த ஐரோப்பியர்கள் அந்த புதிய பிரதேசங்களின் வளங்களை சுருட்டிக் கொண்டனர். லத்தீன் அமெரிக்கா, அடுத்து இந்தியா, அதன் பிறகு ஆப்பிரிக்கா என்று அவர் களது கரங்கள் நீண்டு கொண்டே போனது.
அமெரிக்காவில் கண்டெறியப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்களும், அதற்காக நடைபெற்ற கருப்பர்கள் வணிகமும் தான் புதிய அடிமைமுறைக்கு தொடக்கமாக அமைந்தது. ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளின் சுரண்டல் களமாக மாறியது. முதலாளித்துவ சிந்தனைப் போக்கை கொண்டு தான்  உலகம் முழுவதை யும் இங்கிலாந்து வளைத்து போட் டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டி ஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற் சாலை சூரத்தில் 1600 யின் தொடக் கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இவ்வாறாக தளகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் திடீ ரென்று, அவன் தான் அமெரிக்கன். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெ ரிக்கா வேறு விதமாக கையாண்டது. இரண்டாம் உலக யுத்தம் வரை உலகப் பெரும்சக்தியாக திகழாத அமெரிக்கா, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு பிரிட்டிஷ் மற்றும் ஃபிரஞ்ச் நாடுகளை பின்தள்ளி முன்னுக்கு வந்தது. தனது ராணுவ பலத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தை தன் பிடிக்குள் வைத்திருந்தது. அதற்காகவே தனது ராணுவத்திற்கு மொத்த செலவில் பாதியை செலவும் செய்து வருகிறது.  இந்த கட்டுரை, அமெரிக்காவைப் பற்றி விரிவானதொரு பார்வை ஏªன்ன்று வாசிப்பவர்களுக்கு தோன்றக் கூடும். இந்தியாவின் தற்போதைய பொருளாதாரக் கொள் கையானது பெருமுதலாளித்துவ அமெரிக்க சார்பு கொள்கை. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகள் பெருத்த அழிவை சந்தித்த வேளையில், அந்தப் போரினால் பெருத்த லாபமடைந்தது அமெரிக்கா  தான். பேர்ல் துறைமுக சேதம் மட்டுமே அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், தான் தயாரித்து வைத்திருந்த அணு குண்டை ஜப்பான் மீது வீசி தனது ஆதிக்கத்தை ஐரோப்பிய நேச நாடுகளிடம் நிலைநாட்டிக் கொண்டது. 
அந்த தாக்குதலினால் சக்தி வாய்ந்த ஜப்பானை சீர்குலையச் செய்தது அமெரிக்காவிற்கு லாபமாக அமைந்தது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா நாடுகளில் நடந்து வந்த சண்டை, நேரிட்ட பேரிழப்புகள். ஆதிக்க மனப்பான்மையாலும், நாடு பிடிக்கும் ஆசையாலும் நேர்ந்த இழப்புகள் கூடவே இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய பெரும் சேதம் ஐரோப்பாவிற்குள்ளாகவே நடந்து முடிந்து விட்டது. குறிப்பாக எடுத்துக் கொண்டால், பதினேழாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஏற்பட்ட போரில் அந்நாட்டில் மட்டும் 40 விழுக்காடு மக்கள் மடிந்தனர். அப்படியென்றால் எத்தகைய அளவு பொருட் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஊகித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட 75 விழுக்காட்டுக்கு பொருளாதார இழப்போ அல்லது அதற்கு மேலாகவோ ஏற்பட்டிருக்கக் கூடும். அதே போல் பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் கூட கோடிக் கணக்கான மக்கள் மடிந்தனர். அப்போது உலகத்தையே ஆட்சிபுரிந்த இங்கிலாந்து தனது அனைத்து கண்டுபிடிப்புகளையும் நாடுகளைப் பிடிப்பதிலேயே செலவிட்டது. 
இதற்கிடையே உலகமெங்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அமெரிக்காவிற்கு அனுகூலத்தைத் தந்தது. யூதர்களின் வணிகத் தொடர்பும், அறிவு சொத்தும் அமெரிக்காவுக்கு பயன் விளையச் செய்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலையில் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி ஐ ஏ இத்தாலி நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அங்கு ஜனநாயகம் என்ற போர்வையில் தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப் பட்டன. அதன் விளைவால் அடிமைத்தனமும், வேலை நேரமும் கூடுதலானது. அதனால் அமெரிக்க நிறுவனங்களும், அதன் சார்பு மையங்களும் பெருத்த லாப மடைந்தன. இப்படியான சூழ்நிலை யில் தொடக்கம் முதலே  முதலாளித் துவ முறைமை, அரசியல் மற்றும் பொருளாதாரத்துடன்  பின்னிப் பிணைந்ததாக அமைந்திருந்தது.
எண்பதுகளின் இறுதிவரை உலகத்தில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்கள் சர்வதேச உறவுகளுக் கான கோட்பாட்டை பாதித்து வந்தன. பரவலாக பின்பற்றி வந்து கொண்டிருந்த ஒழுக்க நெறிகள், எதார்த்த வாதம், சுதந்திரத்திற்கான வேட்கை, மார்க்ஸியம்  போன்ற விஷயங்கள் உலகம் முழுவதும் சமூக தளத்தில் முக்கியமாக இயங்கி கொண்டிருந்தன. இத்தகைய சூழலில் எழுபதுகளில் உலகம் முழுவதும்   கலாச்சாரப் பண்பாடு புதிய திசையில் பயணிக்க எத்தனிக்கையில் பிராந்திய பொருளாதார அரசியலில் வெற்றிடம் நிலவியது. இருபத்தைந்து ஆண்டு கால சமூக சீர்திருத்தப் பணியாற்றிய  மேற்கத்திய தலைவர் களால் அத்தகைய பணியை மேலும் கொண்டுசெலுத்த இயலாமல் திக்குத்திசையற்று போயினர். அப் போது தான் உலகமயமாதல் வலுவாக நிலைபெற்றது.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோ’வில் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பியாவில் உள்ள பெரும் வணிக குழுமங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி நாகரிகத்தை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு வணிகத் தினூடாக எடுத்து செல்வது என்பது குறித்து ஆழ்ந்த ஆலோசனையில் ஈடுப்பட்டார்கள். அதையடுத்து உலகில் உள்ள அனைத்து குழு மங்களின் தலைவர்களும், அரசு மற்றும் அரசியல் கர்த்தாக்களும் கூடி விட்டனர். பிறகு அறிஞர் பெரு மக்களும் வெள்ளம் போல் அவர் களோடு கூடினர். இனி முதலீடுகளை எப்படி பெருக்குவது, எவ்வாறு பொதுத் துறைகளை பின்னுக்குத் தள்ளுவது, எவ்வாறு போட்டி போடுவது என்று ஒவ்வொருவரும் தங்களது தங்கள் அறிவுக் குதிரையை சொடுக்கி விட்டார்கள்.
அந்த டாவோ கூட்டம் புயல் போல் வெகுண்டழுந்து ஜி-6 மற்றும் ஜி-8 அமைப்புகளை 1975 ஆம் ஆண்டில் உருவாக்கியது. அது தான் உலகில் உள்ள பணக்கார நாடுகள் முதல் முறை ஒன்றுகூடி, சமூகத்தின் பாதகங்களை எண்ணாமல் ஒருமித்த முடிவெடுத்த தருணம். அவர்கள் மேற்கொள்ள முனையும் செயல்கள் சமூகத்தில் எத்தகைய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று சற்றும் யோசிக்காமல் வணிக நலம் ஒன்றே அவசியம் என்று முடி வெடுத்தனர். முதலாவதாக ஜி-6 கூட்டத்தை   ஃபிரான்ஸ் தொடங்கியது. அந்நாட்டின் ராம்போலைட் என்ற இடத்தில் நடந்த  முதல் உச்சி மாநாட்டில் அங்கத்தினர்களாக ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய பணக்கார நாடுகள் கலந்துகொண்டன. உலக பொருளாதாரத்திற்கேற்ப ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஆராய்தல்
ஜனநாயக நாடுகளுக்கான அரசியல் மற்றும் பொருளாதார பொறுப்பு
சர்வதேச நாடுகளுக்கிடையே யான ஒத்துழைப்புக்கு வழிகோலுதல்.
பண வீக்கம் மற்றும் எரிசக்தி பிரச்னைகள்
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார மேம்பாடு.
உலக வர்த்தக வளர்ச்சியை ஊக்குவித்தல்.
சீரான நிதிநிலையை ஏற் படுத்துதல்
வர்த்தகம் தொடர்பான பன் நோக்கு பேச்சுவார்த்தை 
ரஷியா மற்றும் கீழை பிரதேசங்களுடனான பொருளாதார உறவு
வளரும் நாடுகளை புரிந் துணர்ந்து, அதன் அடிப் படையி லான ஒருங்கிணைந்த கூட்டுறவு
சர்வதேச பொருளாதார ஒத் துழைப்பிற்கான மாநாடு
சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஒத்துழைப்பு
ஆகிய விஷயங்கள் குறித்து அம்மாநாட்டில் விவாதிக்கப் பட்டன. அரசியல் மற்றும் பொரு ளாதார ரீதியாக விவாதிக்கப்பட்ட இவ்விஷயங்கள் மிகவும் முற்போக் கானதாக தோற்றமளித்தாலும் இம்மாநாட்டின் நோக்கம் அதுவல்ல. நேர்த்தியாகவும் நூதனமாகவும் முன் வைக்கப்பட்டத் திட்டங்கள் திட்டங் களனைத்தும் பின்னாட்களில் எவ்வித எதிர் கருத்துக்கும் இடமன்றி உலகப் பெரு முதலாளித்துவம் முன்றாம் உலக நாடுகளின் மீது திணித்தது. அது எவ்வாறு எளிதில் சாத்தியமானது? 
           - தொடரும் -

மந்திரச்சிமிழ்


மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)

அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு விட்டது. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் மனரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றையச்சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அறியாதவன் அல்ல நான். சென்ற இதழுக்கு தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக சிரத்தையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். பன்றிக்காய்ச்சல்தான் பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை மெய்யாகவே பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை. சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, பெரும் அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்தத் தீங்கும் நேர்ந்து விடாது.
இவ்விதழ் இரட்டை இதழாக மலர்ந்துள்ளது. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரெஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும்படப் பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் இலக்கியச் சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் குறித்து முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே. அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.
அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும், நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...
-
பதிப்பாசிரியர்
 --------------------------------------
இதழின் உள்ளடக்கம்

ஹாவர்ட் ஸிண்: மக்களின் வரலாறு 4
பணிவான இளவரசி 7
ஸ்கேர்மெண்டாவின் பயணங்கள் 9
ஃபெத்திக் அக்கின்- இருவேறு தேசங்களிலிருந்து... 16
உலகமயமும் இந்திய விவசாயமும் 25
பெலா குட்டி: இரவுப்பாடகன் 28
அறச்சலூர் இசைக் கல்வெட்டு 32
எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞன் 35
ஜெயந்தன்: கனவாகிப்போன நித்யம் 37
ஆளுமைகள்-அறிமுகங்கள் (ஆன்டன் செக்காவ்) 39
குறும்பட விமர்சனம் 42
இழிந்தவன்: கிம் கி- டுக்’கின் படங்களில் விபச்சாரம் என்ற வன்மம் 45
தமிழ் சினிமா: திரைமொழியும் அதன் வீழ்ச்சியும் 56
உலகமயமாதலின் சீர் குலைவும்
தேசியவாதத்தின் மீள் உருவாக்கமும் 59
குழந்தைமை 62
போர்ஹேஸ் நேர்காணல் 65
மணல்புத்தகம்


தொடர்புக்கு:
க.செண்பகநாதன்,
24\17, சி.பி.டபுல்யூ. குடியிருப்பு
கே.கே. நகர்,
சென்னை. 600 078

செல்: 9894931312

Friday, April 2, 2010

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:2 & 3

             அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு விட்டது. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியல் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் மன ரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றைய சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அறியாதவன் நான் அல்ல. சென்ற இதழுக்கு தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக சிரத்தையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
           இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். பன்றிக்காய்ச்சல்தான் பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை மெய்யாகவே பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை. சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, பெரும் அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்த தீங்கும் நேர்ந்து விடாது. இவ்விதழ் இரட்டை இதழாக மலர்ந்துள்ளது. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும் படப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.
            இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ் இலக்கிய சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் குறித்து முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே. அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.
அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும், நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...

Monday, October 5, 2009

தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிக்கைகளுக்கான வெளி என்பது தீர்க்கமற்றதாய் இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றதான வெளிப்பாடு என்பது அறவே இல்லை. இத்தகைய நிலையில் தான் இந்த இதழை தொடங்க வேண்டியுள்ளது. அதே போல் இதழ் முழுவதும் நான் வியாபித்திருக்கும் நிலையும் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது. உரிய படைப்புகளுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு நானே சில கட்டுரைகளை எழுதினேன். இத்தகைய சூழலில் உயரிய படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான பஞ்சம் தமிழில் அருகி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன். சிறு பத்திரிக்கைகளுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியல்தான் எழுத்தின் போக்கை எதிர்காலத்திற்கு வித்திடுவது. புறவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதனால் அகம் சார்ந்து ஏற்படும் விளைவுகள், உலகமயமாதல் குறித்த சந்தேகங்கள், நியாயப்பாடுகள். இன்றைய பொருளாதார சிக்கல்கள், மொழியியல் ஆகியவை குறித்து வரும் இதழ்களில் விரிவாக அலசி ஆராயப்படும்.  உலகளாவிய படைப்பாக்கம், அரசியல் மற்றும் ஊடகங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும், கடந்த மற்றும் நிகழ்கால சிந்தனைப் போக்குகள் குறித்தும் உரிய எழுத்தாக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இதழை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் சாதக பாதகங்களை உரிய விமர்சனங்களாக ஒப்படையுங்கள். ஆனால் செம்மையான படைப்புகள் மற்றும் உருப்படியான கட்டுரைகள் மட்டுமே இதழில் பிரசுரம் செய்யப்படும் என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். மந்திரச்சிமிழ் இதழில் நவநவீன சிந்தனைகள் , மாற்று மற்றும் நுண்ணரசியல், மாற்று ஊடகம்(உலகளாவிய), நேர்கோடற்ற படைப்பாக்கம் ஆகியவையே முதன்மையாக கொள்ளப்படும் என்பதனையும் தெளிவாக்க விரும்புகிறேன். காலாவதியான பிம்பங்களுக்கும், பெரும் கதையாடல்களுக்கும் இங்கே சிறிதும் இடமில்லை என்பதை  உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். படைப்புகள் மற்றும் கட்டுரைகள் கிடைக்கப்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமே. அப்படி ஒரு நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அதனால்  எக்காரணத்தைக் கொண்டும் இதழ் நிறுத்தப்பட மாட்டாது. இதழின் அரசியலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் கொண்டோ அல்லது நானோ இதழை நிரப்புவோம் என்று கூறிக் கொள்கிறேன். சமகால பிரச்சனைகள் விருப்புவெறுப்பின்றி பிரசுரிக்கப்படும் என்பதையும் கூற விரும்புகிறேன்.


- பதிப்பாசிரியர்
இதழின் உள்ளடக்கம்

பிராந்தியவாதம்: தேசியத்தின் இரட்டைமுகம்-செல்வ புவியரசன்                4


உலகமயமாதலும் அதன் இயலாமையும்-க.செண்பகநாதன்                    9
வெண்ணிறம் கொண்ட கரும்பறவை- ஆல்பெரட் டி முஸோட்(தமிழில்:க. செண்பகநாதன்                    13

ஷியாம் பெனகல் - மாற்று சினிமாவுக்கான இந்திய முகம்-                                   க. செண்பகநாதன்        30
பருவ காலங்களுடன் ஊடாடும் வாழ்வின் சரிதம்- க. செண்பகநாதன்                44

பின்காலனிய நாடகங்கள்:
ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கன்டயரை முன்வைத்து    -தமிழச்சி தங்க பாண்டியன்        50

திருச்சாரணத்து மலைக் கோயில்    -ப. சோழநாடன்                    55