Thursday, July 22, 2010

மந்திரச்சிமிழ் இதழ் 4 (ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது,)

அன்பார்ந்த வாசகர்களுக்கு
உலக செம்மொழி மாநாடு சூன் மாதம் மிக அருமையாக நடந்தேறியுள்ளது. சும்மா கிடந்த தமிழை தனது இலக்கிய பேராற்றல் மூலம் செம்மொழியாக ஆக்கிய பெருமை உலக ஒப்பற்ற தானைத் தலைவர் கலைஞரின் அரும்பெரும் சாதனையை நாம் மெச்சாமல் இருக்க முடிய வில்லை. வந்திருந்த அறிஞர் பெருமக்கள் வாசித்த வாசிப்பில் சிறப்பாக அமைந்திருந்தது மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் வாசிப்புத் தான் மிக சரியாக பொருந்தியது. “தமிழை ஆதிக்கம் செலுத்தவதை எதிர்த்து கலைஞர் மணமேடையிலிருந்து புறபட்டு வந்த போராளி,” என்றார்.  தமிழ்நாட்டில் நடந்தேறிய அனைத்து உலக தமிழ் மாநாடுகளுக்கு இணையாகவும், இன்னும் மேலான கீழ்மையுடன் நடந்தேறியது. விழாவின் முத்தாய்ப்பாக தமிழ் படைப்புகள் மொழிப்பெயர்க்க வேண்டுமென்ற தனது ஞானத்தை கலைஞர் வெளியிட்டார். மிக சிறப்பான அறிவிப்பு அத்தகையது. தமிழ் நாட்டில் ஆகச்சிறந்த படைப்பாளிகளும், மேதைகளும் குவிந்து கிடக்கிறார்கள். முதலில், கலைஞர், கனிமொழி, வைரமுத்து, மறைந்த நன்னிலம் நடராசன், வெறிகொண்டான் போன்றவர்களின் ஆற்றல்களை தான் உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்போது தான் நம் ஆற்றலை உலகுக்கு உணர்த்த முடியும். மாநாடு நடந்து முடிகிற வேளையில் பழ. கருப்பையா தாக்கப்பட்டும், வீடு சூறையாடப்பட்டும் உள்ளது. அவரும் அவரது மகன் ஆறுமுக தமிழனும் தீவிர தமிழ் பற்றாளர்கள், ஆய்வாளர்களும் கூட.  தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்ஷேக்கும், தமிழ் உணர்வார்களை காயப்படுத்தும் இவர்களுக்கும் என்ன வித்யாசம். இதை விட வேறு பல கேவலமான விஷயங்களும் மாநாட்டில் நடந்தேறியுள்ளது. கேவலத்தக்க தமிழ் சொறியர்களை கொண்டு மாநாடு நடத்தியுள்ள கருணாநிதி சற்றும் கூச்சம் இல்லாத அறுவருக்கத்தக்க சதைப் பிண்டம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.
இதனிடையே மாநாடு நடந்து முடிந்த அடுத்த நாளிலேயே தமிழருவி மணியன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சூடு கொடுத்திருக்கிறது. தமிழறிஞர்களை போற்றி வளர்க்க வழியின்றி எப்படி தமிழ் மீட்சி கொள்ளும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் கலைஞரை பொருத்தவரையில் வேசியைப் போல் இரந்துண்ணும் அறிஞர்களே போதுமானது. இத்தகைய சூழ்நிலைக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. சரியான அரசியல் மற்றும் கலை பற்றிய அறிதலும், புரிதலும் பெறதாதவாறு மக்களை வைத்திருப்பது தான் என்பதை நமக்கு சற்றே உணர தருகிறது. அதற்கு உதாரணம் மாநாட்டுக்கு வந்த ஒரு கழக உடன்பிறப்பு தேவதேவன் கவிதையை வாங்கியுள்ளார். கடை விரித்திருந்த அந்த பதிப்பாளரிடம் நாற்பது ரூபாய் விலை இப்புத்தகத்திற்கு அதிகம் என்று கூறி, பேரம் பேசி இருபத்தைந்து ரூபாய்க்கு அப்புத்தகத்தை வாங்கியுள்ளார். வாங்கும் போது நம்ம ஆளு இதை எழுதியதுபோல்  (அந்த உடன் பிறப்பு தேவதேவனின் பெயரில் உள்ள பிற்பகுதி வார்த்தையை சாதி பட்டம் என்று தவறுதலாக எண்ணிருந்தார். ஆனால் அந்த நபர் நினைத்தது போல் கவிஞர் அச்சாதியை சேர்ந்தவரும் அல்ல) என்ற பெருமித்துடன் அதனை வாங்கியுள்ளார். அவ்வாறாகத்தான் மக்களும், கழக உடன் பிறப்புகளும் உள்ளனர். இத்தகைய மனிதர்களிடம் தான் கலைஞர் தனது வாய் ஜாலத்தை கட்டி தன்னை ஒரு ரட்சகராக பாவித்து வருகிறார். அது தான் அவரது விருப்பமும் கூட. எண்ணற்றற வியாதிகளை போல் பெருகி கிடக்கும் ஊடகங்கள் அனைத்தும் பிச்சைகாரர்களை போல் இரந்துண்ணும் நிலையை காண முடிகிறது.  இந்த மாநாட்டின் விளைவால் அணு அளவு நன்மைக் கூட ஏற்பட போவதில்லை.
அடுத்ததாக மாவோயிஸ்டு பிரச்சனையில் இந்திய பேரரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து நோக்குகையில் இந்திய அரசாங்கம் சாவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. படையினரை பெருமுதலாளி தரகு அரசாங்கம் கைகூலியாக பயன்படுத்தி வருகிறது. படையினர் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.   

2 comments:

  1. அருமையான எதிர்வினை. உங்கள் இதழ்பற்றி இலக்கிய நண்பர் ஒருவர் கூறினார். இதழைப்பார்த்தில்லை.. ஆனால் இந்த எதிர்வினை உங்கள் இலக்கிய ஆர்வத்தை துல்லியமாக வெளிப்படுத்தகிறது.

    ReplyDelete
  2. உங்கள் இதழ்பற்றி அறிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete