அன்பார்ந்த வாசகர்களுக்கு
மந்திரச்சிமிழ் முந்தைய இதழுக்கும் இப்போதைய ஐந்தாவது இதழ் வெளியாகும் இடைவெளிக்கும் பல நிகழ்வுகள் நடந் தேறியுள்ளன. பாபர் மசூதி குறித்த கட்டப் பஞ்சாயத்து முதல் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வரை இந்திய உளவியலின் கோரமுகமும், தமிழ் இலக்கியச் சூழலையும் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. எல்லாம் ஆளுமைகளால் நேரும் விபரிதம். தமிழில் இலக்கியம் என்ற பெயரில் வெளி வந்துகொண்டிருக்கும் வறண்ட ‘நதி’யின் ‘தீரா’த வேட்கையும், ‘உயிர’ற்ற பிரதிகளையுடைய ஆளு‘மை’களும் அதனதன் போக்கில் நெடிய பாதக விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். அதை முன்னிட்டு முக்கிய இலக்கிய கர்த்தாக் களின் பதிப்பகம் பல நூறு புத்தகங்கள் அச்சிடும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்குத் தேவையான தாள்களை முன்கூட்டிய வாங்கி சேமித்து வைக்கவும், அதே போல் மலம் துடைப்போர் முன் கூட்டிய காகிதங்களை வாங்கி வைத்து கொள்ளும்படி எச்சரிக்கைப் படுகிறார்கள். அப்படியில்லை யென்றால் சற்று பொறுத்திருத்து புத்தகம் வெளியானதும் உபயோகத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கழுதைகள் மிகவும் அருகி வரும் காலக்கட்டத்தில் அவசியம் உங்களுக்கு வெற்று தாள்களுக்கு பதிலாக அச்சிட்ட தாள்களே கிடைக்கப்பெறும்.
இலவசங்களே தீர்ந்து போகும் அளவுக்கு கலைஞரின் இலவசத்திட்டங்களுக்கு அடுத்தப்படியாக கலைஞர் வீடு கட்டும் திட்டம் நிறைவேறி வருகிறது. வரும் தேர்தலில் இலவசங்கள் குறித்து அறிவிப்பு விடுவதற்கே அவருக்கு பஞ்சம் நேரலாம். அதற்காக பன்னாட்டு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்நத் தோடு இலவசங்களை ஆராய்வதற்கே ஒரு ஆய்வு மையம் அமைக்கும் நெருக்கடி கூட கலைஞருக்கு வரலாம். ஆகையால் எங்களின் சிற்றறிவுக்கு எட்டிய யோசனையாக அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட் தரவேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைக்கிறோம். ஏன் 2ஜி ஸ்பெக்ட்ரத்தைக் கூட இலவசமாகத் தரலாம்.
வெகுஜன பத்திரிகையில் வெளியான தங்களது படைப்புகள் சிறுபத்திரிக்கையில் வெளி வருவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவைகள் என்பதாக சிலர் தெரிவித்து வரும் வேளையில் இது குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. சிறு பத்திரிக்கை என்ன என்பது இவர்கள் முதலில் அறிந்து கொள்ளட்டும். சிறு பத்திரிக்கையில் முதல் கடமையே அறம் சார்ந்த விஷயம். அத்தகைய பத்திரிகையும் அறமுள்ளதாக இருக்க வேண்டும். எழுதுபவரும் அந்த அறத்துடன் இருக்க வேண்டும். அயல் இலக்கிய படைப்புகளை அங்கும் இங்கும் மாற்றி தன் படைப்பாக வெளியிடுவது எத்தகைய சிறு பத்திரிகை தரம் என்பது புலப்பட்ட வில்லை. வெகுஜன ரசனை என்பதோடு தன்னை இணைத்துக் கொண்டு, அதில் சுக்கில சுகம் அடைந்து விட்ட இந்த பராக்கிரம பாக்கியசாலிகளுக்கு இம்மாதிரியாக சிறுபத்திரிகை மீது ரோமான்டிசம் அவசியமில்லை.
தமிழில் புதிய போக்கு சமீப காலமாக மேலோன்றி வருகிறது. தினக்கழிவு போல் எழுதித் தள்ளுகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தலையணை அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள். அந்த நூல்களை எவரொருவராவது முழுவதுமாக படித்திருப்பார்களென்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அளவு பொருட்டல்ல. அதில் படிக்கும் அளவுக்கு ஏதும் இல்லை என்பதே நிதர்சனம். வாசிப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி தன்னை ஒரு மேதைமைமிக்கவராக காட்டிக்கொள்ளும் விதம் மிக அற்பமானது.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒப்பற்ற தமிழ் இலக்கிய கர்த்தா சாரு நிவேதா’வின் புத்தக வெளியீட்டில் கலையுலக மாமேதை கனிமொழி அழைக்கப்பட்டிருக்கிறார். உலகமே அவரது அரும்பெரும் சாதனையான 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து உமிழ்ந்துகொண்டிருக்கையில் அவருக்கு தார்மீக ஆதரவை தரும் வகையிலும், இலக்கிய கர்த்தா என்ற அங்கீகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்கும், முன் பெற்ற பிச்சைகளுக்கு பிராயச்சித்தமாகக்கூட இதைக் கொள்ளலாம். அரசியலில் தன்னாலான மேதகு காரியங்கள் போதாதென்று அந்த அம்மையாரும் புறப்பட்டு வந்துவிட்டார். ஆட்சிமாறினால் அடுத்து வரும் ஆட்சியாளர்களை விமர்சித்து கவிதைபுனைய இலக்கிய கூலிகளைத் தேற்ற தனது அடிவருடிகளை தேடி வந்துவிட்டார் போலும். இல்லை அனைத்து துறை போலவே இத்துறையிலும் தங்கள் குடும்பத்தின் ஏகபோகம் என்பதாக எண்ணி கொண்டார் போல். அதுவும் சாத்தியம்தான். தமிழ்நாடு அடிவருடிகளின் சொர்க்கபூமி. உயிர்மை மீது கொண்டிருக்கும் அனுதாபத்தை சாதகமாக்கிக் கொண்டு மனுஷியபுத்திரன் ஆடும் ஆட்டத்தை அடக்கிக் கொள்வது அவருக்கு நல்லது.
இலக்கியம் என்பது மொழியை சிலாகித்து எழுத வேண்டிய ஒன்று. அதில் எத்தகைய விரசமும் இருக்க வாய்ப்பில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பற்றி பேசும் சாரு, அவரது மொழியின் இலகுத்தன்மை குறித்து அறிந்துள்ளாரா என்பது சந்தேகமாக உள்ளது. எஸ். ராமகிருஷ்ணன் பரந்துபட்ட வாசிப்பாளர். அவரது முற்பகுதி எழுத்துகள் சிறப்பானவை. தமிழில் காலம் கடந்து முன்னணி இலக்கியவாதியாக திகழ வேண்டிய எஸ். ராமகிருஷ்ணன் அரசியல்வாதி போன்ற செயல்களில் ஈடுபடுவது உகந்ததாக அமையாது. அதற்குப் பதிலாக தனது படைப்புகளின் மீது அக்கறைக் கொண்டு இதுவரை அவர் வீணடித்த காலங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும்.
கலைஞர் ஒரு இலக்கியவாதி அல்ல என்று தனது ஞானத்தின் மூலம் கண்டறிந்த ஜெயமோகனின் எழுத்துகளும் இலக்கிய தரமற்றது என்று யாவரும் அறிந்ததே. எழுத்து என்பது ஒருவித பித்து நிலையிலிருந்து வெளியாகும் அம்சம். அத்தகைய நிலையில் ஜெயமோகன் ஒரு சைக்கோ என்று கூறி, அவருக்கு ஒரு பித்தநிலை வழங்கி ஆசி தந்த கனிமொழியை வைத்து புத்தக வெளியீட்டை நடத்திய சாருக்கு ஜெயமோகனைப் பற்றி அத்தகைய ஆவேசம் அவசியமில்லை. ஒருவேளை ஜெயமோகன் சினிமாத் துறையில் பிரவேசிப்பதால் சாருவுக்கு ஆதங்கம் இருக்கலாம். இலக்கியம் என்று எடுத்துகொண்டால் இருவருமே பூஜியம். தமிழ் வாசகர்களுக்கு எழுதுவது குறித்து அடிக்கடி வருத்தம் கொள்ளும் சாரு, அத்தகைய உவகையற்ற பணியை விடுத்து சந்தோஷம் தரும் ஏனைய செயல்களில் அவர் ஈடுபடலாம். குறிப்பாக புகழ்மிக்க உலகத்தரம் வாய்ந்த அரசியல் விமர்சகரிடம் தன் டவுசரை கிழற்றி காட்டி புணரச்செய்ய கட்டாயப்படுத்தியது போல்.
மந்திரச்சிமிழ் இதழ் இரண்டாம் ஆண்டை எடுத்துவைக்கும் வேளையில் அரசியலை முற்றிலும் தவிர்க்க எண்ணியுள்ளோம். இனி இதழில் அரசியல் தொடர்பான விஷயங்கள் அறவே இருக்காது. ஆகையால் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம். இதழ் முற்றிலும் கலை இதழாகவே இனி பிரவேசிக்கவுள்ளது. இதழில் அயல்மொழி படைப்புகள் அதிகம் வெளிவருவது குறித்து பலர் வருத்தப்படுகிறார்கள். பத்திரிகை தமிழில்தான் வருகிறது என்பதையும், அயல் மொழிகளில் வருவதில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
- ஆசிரியர்

No comments:
Post a Comment