உலகமயமாதலின் சீர் குலைவும் தேசியவாதத்தின் மீள் உருவாக்கமும்
மிக உன்னதம் என்று கருதப்படும் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் சில பத்து ஆண்டுகளிலேயே காலாவதி ஆகிவிடுகின்றன. சில கொள்கைகள் மட்டுமே அதிகபட்சம் ஐம்பது ஆண்டுகள் வரை நீடித்து நின்று, பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப சாத்தியங்களை நிகழ்த்தி விட்டு மறைகின்றன. அவைகளும்கூட ராணுவ ஆதிக்கத்தினாலேயே தக்க வைக்கப்பட்டன. அத்தகைய வழியில் தான் பரந்து விரிந்ததொரு தாராள பொருளாதார முறைமை முப்பது ஆண்டுகள் மட்டும் நீடித்து விட்டு 1929 ஆம் ஆண்டு காலாவதியானது. அதேப் போல் பொதுவுடைமை சித்தாந்தமும் உலகளாவிய கொள்கை யாகவும், ஒரு மததைப் போலவும், பொருளாதாரக் கொள்கையாகவும் ரஷியாவில் எழுபது ஆண்டுகளும், மத்திய ஐரோப்பியாவில் நாற்பத்தைந்து வருடங்களும் வியாபித்திரந்தது. அதுவும் ராணுவத்திற்கும் புஜ பலத்திற்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. அதேப் போலவே தான் *கேம்னிஜியனிச’மும் நாற்பத்தி ஐந்து வருடங்கள் மட்டுமே இருந்து விட்டு காலாவதியானது. அவ்வகை யில் உலகமயமாதல் கொள்கையும் தனது தொழிற் நுட்ப பராகிரமத்தை யும், சந்தை வழிப்பாட்டு தன்மை யையும், அறிஞர் பெருமக்களின் அறிவாற்றலையும் கொண்டு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கோலாட்சி செய்துவிட்டு இப் போது மரணித்து விட்டது.
பெரும் கோட்பாடுகள் ஒரே இரவில் காலாவதியாகி விடுவ தில்லை என்றாலும் அதன் பாணி கள், அதாவது உடையோ அல்லது உணவோ, அல்லது பொருளா தாரமே கூட காலாவதியாகின்றன. உலகமயமாதல் கொள்கையின் மீது கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கையினால் பலர் எழுப்பிய நம்பிக்கை கட்டிடங்கள் அனைத்தும் தகர்ந்து நொறுங்கி விழும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நன்னம்பிக்கை முனையின் ஊடாக மேற்கு இந்திய தீவையடைந் ததும், அமெரிக்காவை கண்டறிந் ததும் தான் மனித வரலாற்றின் மிக முக்கியமானது. அதன் பிறகு தான் மேற்கிந்திய தீவு மற்றும் கீழ் நாடுகளுடைனான வணிகத்தினால் பெரும் மேலை நாடுகள் பெரும் பயனடைந்தன. அதே வேளையில் அந்நிகழ்வினால் பூர்வீக குடிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
தனது தோற்றுவாயிலிருந்து முதலாளித்துவம் உலகளாவிய விஷயமாக கோலாட்சி செய்து வந்தது. லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தேசங்களைக் கண்டறிந்த ஐரோப்பியர்கள் அந்த புதிய பிரதேசங்களின் வளங்களை சுருட்டிக் கொண்டனர். லத்தீன் அமெரிக்கா, அடுத்து இந்தியா, அதன் பிறகு ஆப்பிரிக்கா என்று அவர் களது கரங்கள் நீண்டு கொண்டே போனது.
அமெரிக்காவில் கண்டெறியப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்களும், அதற்காக நடைபெற்ற கருப்பர்கள் வணிகமும் தான் புதிய அடிமைமுறைக்கு தொடக்கமாக அமைந்தது. ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளின் சுரண்டல் களமாக மாறியது. முதலாளித்துவ சிந்தனைப் போக்கை கொண்டு தான் உலகம் முழுவதை யும் இங்கிலாந்து வளைத்து போட் டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டி ஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற் சாலை சூரத்தில் 1600 யின் தொடக் கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இவ்வாறாக தளகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் திடீ ரென்று, அவன் தான் அமெரிக்கன். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெ ரிக்கா வேறு விதமாக கையாண்டது. இரண்டாம் உலக யுத்தம் வரை உலகப் பெரும்சக்தியாக திகழாத அமெரிக்கா, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு பிரிட்டிஷ் மற்றும் ஃபிரஞ்ச் நாடுகளை பின்தள்ளி முன்னுக்கு வந்தது. தனது ராணுவ பலத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தை தன் பிடிக்குள் வைத்திருந்தது. அதற்காகவே தனது ராணுவத்திற்கு மொத்த செலவில் பாதியை செலவும் செய்து வருகிறது. இந்த கட்டுரை, அமெரிக்காவைப் பற்றி விரிவானதொரு பார்வை ஏªன்ன்று வாசிப்பவர்களுக்கு தோன்றக் கூடும். இந்தியாவின் தற்போதைய பொருளாதாரக் கொள் கையானது பெருமுதலாளித்துவ அமெரிக்க சார்பு கொள்கை. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகள் பெருத்த அழிவை சந்தித்த வேளையில், அந்தப் போரினால் பெருத்த லாபமடைந்தது அமெரிக்கா தான். பேர்ல் துறைமுக சேதம் மட்டுமே அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், தான் தயாரித்து வைத்திருந்த அணு குண்டை ஜப்பான் மீது வீசி தனது ஆதிக்கத்தை ஐரோப்பிய நேச நாடுகளிடம் நிலைநாட்டிக் கொண்டது.
அந்த தாக்குதலினால் சக்தி வாய்ந்த ஜப்பானை சீர்குலையச் செய்தது அமெரிக்காவிற்கு லாபமாக அமைந்தது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா நாடுகளில் நடந்து வந்த சண்டை, நேரிட்ட பேரிழப்புகள். ஆதிக்க மனப்பான்மையாலும், நாடு பிடிக்கும் ஆசையாலும் நேர்ந்த இழப்புகள் கூடவே இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய பெரும் சேதம் ஐரோப்பாவிற்குள்ளாகவே நடந்து முடிந்து விட்டது. குறிப்பாக எடுத்துக் கொண்டால், பதினேழாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஏற்பட்ட போரில் அந்நாட்டில் மட்டும் 40 விழுக்காடு மக்கள் மடிந்தனர். அப்படியென்றால் எத்தகைய அளவு பொருட் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஊகித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட 75 விழுக்காட்டுக்கு பொருளாதார இழப்போ அல்லது அதற்கு மேலாகவோ ஏற்பட்டிருக்கக் கூடும். அதே போல் பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் கூட கோடிக் கணக்கான மக்கள் மடிந்தனர். அப்போது உலகத்தையே ஆட்சிபுரிந்த இங்கிலாந்து தனது அனைத்து கண்டுபிடிப்புகளையும் நாடுகளைப் பிடிப்பதிலேயே செலவிட்டது.
இதற்கிடையே உலகமெங்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அமெரிக்காவிற்கு அனுகூலத்தைத் தந்தது. யூதர்களின் வணிகத் தொடர்பும், அறிவு சொத்தும் அமெரிக்காவுக்கு பயன் விளையச் செய்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலையில் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி ஐ ஏ இத்தாலி நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அங்கு ஜனநாயகம் என்ற போர்வையில் தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப் பட்டன. அதன் விளைவால் அடிமைத்தனமும், வேலை நேரமும் கூடுதலானது. அதனால் அமெரிக்க நிறுவனங்களும், அதன் சார்பு மையங்களும் பெருத்த லாப மடைந்தன. இப்படியான சூழ்நிலை யில் தொடக்கம் முதலே முதலாளித் துவ முறைமை, அரசியல் மற்றும் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்ததாக அமைந்திருந்தது.
எண்பதுகளின் இறுதிவரை உலகத்தில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்கள் சர்வதேச உறவுகளுக் கான கோட்பாட்டை பாதித்து வந்தன. பரவலாக பின்பற்றி வந்து கொண்டிருந்த ஒழுக்க நெறிகள், எதார்த்த வாதம், சுதந்திரத்திற்கான வேட்கை, மார்க்ஸியம் போன்ற விஷயங்கள் உலகம் முழுவதும் சமூக தளத்தில் முக்கியமாக இயங்கி கொண்டிருந்தன. இத்தகைய சூழலில் எழுபதுகளில் உலகம் முழுவதும் கலாச்சாரப் பண்பாடு புதிய திசையில் பயணிக்க எத்தனிக்கையில் பிராந்திய பொருளாதார அரசியலில் வெற்றிடம் நிலவியது. இருபத்தைந்து ஆண்டு கால சமூக சீர்திருத்தப் பணியாற்றிய மேற்கத்திய தலைவர் களால் அத்தகைய பணியை மேலும் கொண்டுசெலுத்த இயலாமல் திக்குத்திசையற்று போயினர். அப் போது தான் உலகமயமாதல் வலுவாக நிலைபெற்றது.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோ’வில் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பியாவில் உள்ள பெரும் வணிக குழுமங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி நாகரிகத்தை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு வணிகத் தினூடாக எடுத்து செல்வது என்பது குறித்து ஆழ்ந்த ஆலோசனையில் ஈடுப்பட்டார்கள். அதையடுத்து உலகில் உள்ள அனைத்து குழு மங்களின் தலைவர்களும், அரசு மற்றும் அரசியல் கர்த்தாக்களும் கூடி விட்டனர். பிறகு அறிஞர் பெரு மக்களும் வெள்ளம் போல் அவர் களோடு கூடினர். இனி முதலீடுகளை எப்படி பெருக்குவது, எவ்வாறு பொதுத் துறைகளை பின்னுக்குத் தள்ளுவது, எவ்வாறு போட்டி போடுவது என்று ஒவ்வொருவரும் தங்களது தங்கள் அறிவுக் குதிரையை சொடுக்கி விட்டார்கள்.
அந்த டாவோ கூட்டம் புயல் போல் வெகுண்டழுந்து ஜி-6 மற்றும் ஜி-8 அமைப்புகளை 1975 ஆம் ஆண்டில் உருவாக்கியது. அது தான் உலகில் உள்ள பணக்கார நாடுகள் முதல் முறை ஒன்றுகூடி, சமூகத்தின் பாதகங்களை எண்ணாமல் ஒருமித்த முடிவெடுத்த தருணம். அவர்கள் மேற்கொள்ள முனையும் செயல்கள் சமூகத்தில் எத்தகைய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று சற்றும் யோசிக்காமல் வணிக நலம் ஒன்றே அவசியம் என்று முடி வெடுத்தனர். முதலாவதாக ஜி-6 கூட்டத்தை ஃபிரான்ஸ் தொடங்கியது. அந்நாட்டின் ராம்போலைட் என்ற இடத்தில் நடந்த முதல் உச்சி மாநாட்டில் அங்கத்தினர்களாக ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய பணக்கார நாடுகள் கலந்துகொண்டன. உலக பொருளாதாரத்திற்கேற்ப ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஆராய்தல்
ஜனநாயக நாடுகளுக்கான அரசியல் மற்றும் பொருளாதார பொறுப்பு
சர்வதேச நாடுகளுக்கிடையே யான ஒத்துழைப்புக்கு வழிகோலுதல்.
பண வீக்கம் மற்றும் எரிசக்தி பிரச்னைகள்
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார மேம்பாடு.
உலக வர்த்தக வளர்ச்சியை ஊக்குவித்தல்.
சீரான நிதிநிலையை ஏற் படுத்துதல்
வர்த்தகம் தொடர்பான பன் நோக்கு பேச்சுவார்த்தை
ரஷியா மற்றும் கீழை பிரதேசங்களுடனான பொருளாதார உறவு
வளரும் நாடுகளை புரிந் துணர்ந்து, அதன் அடிப் படையி லான ஒருங்கிணைந்த கூட்டுறவு
சர்வதேச பொருளாதார ஒத் துழைப்பிற்கான மாநாடு
சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஒத்துழைப்பு
ஆகிய விஷயங்கள் குறித்து அம்மாநாட்டில் விவாதிக்கப் பட்டன. அரசியல் மற்றும் பொரு ளாதார ரீதியாக விவாதிக்கப்பட்ட இவ்விஷயங்கள் மிகவும் முற்போக் கானதாக தோற்றமளித்தாலும் இம்மாநாட்டின் நோக்கம் அதுவல்ல. நேர்த்தியாகவும் நூதனமாகவும் முன் வைக்கப்பட்டத் திட்டங்கள் திட்டங் களனைத்தும் பின்னாட்களில் எவ்வித எதிர் கருத்துக்கும் இடமன்றி உலகப் பெரு முதலாளித்துவம் முன்றாம் உலக நாடுகளின் மீது திணித்தது. அது எவ்வாறு எளிதில் சாத்தியமானது?
- தொடரும் -